
தெலுங்கு நடிகர் பவன் கல்யாண், கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமாகிவிட்டார்.
ஜனசேனா கட்சியின் தலைவரும், தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண், கடந்த ஏப்ரல் 16 அன்று கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து மருத்துவர்கள் அவருக்குச் சிகிச்சை அளித்தார்கள்.
இந்நிலையில் கரோனா பாதிப்பிலிருந்து பவன் கல்யாண் மீண்டுவிட்டதாக ஜனசேனா கட்சி தகவல் தெரிவித்துள்ளது. மூன்று நாள்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா இல்லை என்பது உறுதியானது. தனக்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் பவன் கல்யாண் நன்றி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.