கரோனா நிவாரண நிதி: ரூ. 30 கோடி வழங்கிய சன் டிவி
கரோனா நிவாரண நிதிக்காக ரூ. 30 கோடியை வழங்கியுள்ளது சன் டிவி நிறுவனம்.


கரோனா நிவாரண நிதிக்காக ரூ. 30 கோடியை வழங்கியுள்ளது சன் டிவி நிறுவனம்.
கரோனா நிவாரண நிதிக்காக சினிமா, கிரிக்கெட் பிரபலங்களும் முன்னணி நிறுவனங்களும் நன்கொடை அளித்து வருகிறார்கள். இந்நிலையில் கரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ. 30 கோடி அளித்துள்ளது சன் டிவி நிறுவனம்.
இந்தத் தொகை, மத்திய அரசு மற்றும் மாநில அரசின் பல்வேறு கரோனா தடுப்புத் திட்டங்களுக்கும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருந்துகளை வழங்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் என்று இதுதொடர்பான அறிக்கையில் சன் டிவி தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் உள்ள தனது லட்சக்கணக்கான நேயர்களிடம் கரோனா விழிப்புணர்வை உண்டாக்கும் நடவடிக்கைகளிலும் சன் டிவி ஈடுபடும் என்றும் கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...