படம் - twitter.com/DirectorS_Shiva
படம் - twitter.com/DirectorS_Shiva

கரோனாவுக்குப் பலியான கஜினி பட தயாரிப்பாளர்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, அசின் நடித்த கஜினி படத்தைத் தயாரித்தவர் சேலம் சந்திரசேகரன்...
Published on

சூர்யா நடித்த கஜினி படத் தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரன் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 58.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, அசின் நடித்த கஜினி படத்தைத் தயாரித்தவர் சேலம் சந்திரசேகரன். சுள்ளான், பிப்ரவரி 14, சபரி, கில்லாடி போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். தயாரிப்பாளராக ஆவதற்கு முன்பு திரையரங்க உரிமையாளராகவும் விநியோகஸ்தராகவும் இருந்துள்ளார்.

கடைசியாக வெங்கடேஷ் இயக்கத்தில் பரத், நிலா நடித்த கில்லாடி படத்தைத் தயாரித்தார். அது 2006-ல் தொடங்கப்பட்டு 2015-ல் வெளியானது.

சமீபத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சேலம் சந்திரசேகரனின் மறைவுக்குத் திரையுலகினரும் ரசிகர்களும் சமூகவலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com