காலா, அசுரன் படங்களில் நடித்த நிதிஷ் வீரா கரோனா பாதிப்பால் மரணம்
அசுரன், புதுப்பேட்டை, காலா படங்களில் நடித்த நிதிஷ் வீரா, கரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 45.
2006-ல் செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை படத்தில் நடிகராக அறிமுகமானார் நிதிஷ் வீரா. அசுரன், காலா, வெண்ணிலா கபடிக்குழு, கழுகு போன்ற படங்களில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள லாபம் படத்திலும் அவர் நடித்துள்ளார்.
சமீபத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார் நிதிஷ் வீரா. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சென்னையில் அவர் இறந்தார்.
நிதிஷ் வீராவின் மறைவுக்கு இயக்குநர் செல்வராகவன் உள்பட பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.