பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம்: ஜூனியர் என்டிஆர்

கரோனாவுடனான போரில் நாம் வெற்றி கண்ட பிறகு, அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடலாம்...
பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம்: ஜூனியர் என்டிஆர்
Updated on
1 min read

கரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தன்னுடைய பிறந்த நாள் கொண்டாட்டத்தைத் தவிர்க்க வேண்டும் என்று ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர்.

பாகுபலி 2 படத்துக்கு அடுத்ததாக, ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிக்கும் ஆர்ஆர்ஆர் என்கிற படத்தை எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கி வருகிறார். ராஜமெளலியும் ஜூனியர் என்டிஆரும் இதற்கு முன்பு மூன்று படங்களில் இணைந்துள்ளார்கள். ஜூனியர் என்டிஆர், 2001 முதல் தெலுங்குப் படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் கரோனாவால் பாதிக்கப்பட்டார். 

மே 20 அன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் ஜூனியர் என்டிஆர். இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தன்னுடைய பிறந்த நாள் கொண்டாட்டத்தைத் தவிர்க்க வேண்டும் என்று ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியதாவது:

உங்களுடைய வாழ்த்துகள், விடியோக்களை நான் பார்த்தேன். அனைவருக்கும் நன்றி. நான் நலமாக உள்ளேன். விரைவில் கரோனாவிலிருந்து மீண்டு வருவேன். 

ஒவ்வொரு வருடமும் என் பிறந்த நாளுக்காக நீங்கள் வெளிப்படுத்தும் அன்பை எண்ணி எப்போதும் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் இந்தக் கடினமான சூழலில் நீங்கள் எனக்குத் தரும் சிறந்த பரிசு, பாதுகாப்புடன் வீட்டில் இருப்பதுதான். இது கொண்டாட்டத்துக்கான நேரம் இல்லை. கரோனாவுடனான போரில் நாம் வெற்றி கண்ட பிறகு, அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடலாம் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com