விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தடுப்பூசி போட்டுக்கொள்ள பலர் சொல்லியும் கேட்கவில்லை: நடிகர் வெங்கட் சுபா மறைவுக்கு தயாரிப்பாளர் டி. சிவா உருக்கம்

தடுப்பூசி போட்டுக்கொள்ளச் சொல்லி நான் சொல்லியும் ஊர் உறவு சொல்லியும் கேட்கவில்லை...

News image
படம் - facebook.com/ramaswami.venkatakrishnan
Updated On :31 மே 2021, 7:37 am

DIN

கரோனாவுக்கு என் உடன் பிறந்த சகோதரனையும் உடன்பிறவா சகோதரனையும் பறி கொடுத்துவிட்டேன் என்று தயாரிப்பாளர் டி. சிவா கூறியுள்ளார்.

நடிகரும் விமர்சகருமான வெங்கட் சுபா சமீபத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அவருடைய நண்பரும் தயாரிப்பாளருமான டி. சிவா, வெங்கட் சுபாவின் மறைவு பற்றி ஃபேஸ்புக்கில் எழுதியதாவது:

வெங்கட்.. வெங்கட்.. வெங்கட் என் வாழ்நாளில் நான் அதிகம் அழைத்த நண்பனின் பெயர். 36 வருடங்கள் ஆயிரமாயிரம் நினைவுகள், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெற்றியிலும் தோல்வியிலும் உடன் இருந்தவன். அறிவாளி, எழுத்தாளன், படைப்பாளி, நடிகன், விமர்சகன் என ஒரு மினி சகலகலா வல்லவன். யார் சொல்லி கேட்கா விட்டாலும் நான் சொன்னால் கேட்பான் ஆனால் தடுப்பூசி போட்டுக்கொள்ளச் சொல்லி நான் சொல்லியும் ஊர் உறவு சொல்லியும் கேட்கவில்லை. அதுதான் ஆஜானுபாகுவாக ஆரோக்யமாக இருந்த உன்னை கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமி எங்களிடமிருந்து பிரித்துவிட்டது மட்டுமல்ல உன் எதிர்கால படைப்புகளை, திட்டங்களை, கனவுகளையும் அழித்து விட்டது. 

சினிமா மீதுதான் எத்தனை காதல் உனக்கு ஆதாயமே இல்லாமல் இதையே சுற்றி சுற்றி வந்து சேவை செய்தாய். நட்பே வாழ்க்கை என நண்பர்களை சுற்றியே வாழ்ந்தாய். நட்பும் தமிழ் சினிமாவும் என்றும் உன்னை மறவாது நண்பனே. கரோனாவுக்கு என் உடன் பிறந்த சகோதரனைப் பறி கொடுத்தேன் இன்று உடன்பிறவா சகோதரன் உன்னையும் பறி கொடுத்துவிட்டேன். வெங்கட், மறக்க முடியாதடா உன்னை. மன்னித்து விடு வெங்கட்டா... இந்த கரோனாவை எதிர்த்து உன்னைக் காப்பாற்ற உன் மனைவியும் உறவுகளும் நண்பர்களும் நீ நேசித்த மொத்த தமிழ் சினிமாவும் உனக்காக அப்போலோ மருத்துவமனைக்குத் தொடர்பு கொண்டு போராடியது. ஆனாலும் உன்னை மீட்க முடியவில்லையடா வெங்கட். கரோனா காலத்திலும் கடுமையாக உழைத்துவிட்டாய் வெங்கட். தெய்வத்தின் திருவடியில் நீ இளைப்பாறு. உன்னை தினம் தொட்டு வணங்கி கொள்கிறேன் என்று எழுதியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.