
தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் அவினாஷின் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக நிதியுதவி கோரி விடியோ வெளியிட்டுள்ளார் நடிகை சுனைனா.
2008-ல் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் சுனைனா. 2019-ல் இவர் நடித்த சில்லுக்கருப்பட்டி படம் வெளிவந்தது.
இந்நிலையில் தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் அவினாஷ், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக நிதியுதவி தேவைப்படுவதால் நிதி திரட்டுவதற்காக சமூகவலைத்தளங்களில் விடியோ வெளியிட்டுள்ளார் நடிகை சுனைனா. அதில் அவர் கூறியிருப்பதாவது:
சமூகவலைத்தளங்களில் இதுபோன்ற விடியோக்களை நான் வெளியிட மாட்டேன். ஆனால் ஒரு அவசர நிலை என்பதால் இதைப் பதிவு செய்கிறேன். ஒன்றரை மாதத்துக்கு முன்பு தயாரிப்பாளர் அவினாஷ், கரோனாவால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு ஒரு மருத்துவமனையிலிருந்து மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக நிதியுதவி தேவைப்படுகிறது. இது மிகவும் அவசரம். இந்த லிங்க்கை கிளிக் செய்து, பத்து ரூபாயாக இருந்தாலும் அது எவ்வளவு சிறிய தொகையாக இருந்தாலும் தயவு செய்து உதவுங்கள். இந்த விவரங்களை முடிந்தவரைப் பகிரவும். இது பலருக்கும் சென்றடைய வேண்டும். கரோனாவால் பாதிக்கப்பட்ட நான் அதிலிருந்து மீண்டுள்ளேன். எனவே கரோனா வைரஸ் என்பது விளையாட்டல்ல என்பது எனக்குத் தெரியும். தயவுசெய்து அனைவரும் உதவுங்கள் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.