சன் டிவியில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஏறக்குறைய 4 வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் ரோஜா தொடர் மக்களின் பேராதரவை பெற்று வருகிறது. மக்கள் அதிகம் பார்க்கும் நிகழ்ச்சிகளை மதிப்பிடும் டிஆர்பி ரேட்டிங்கில் ரோஜா தொடர் முதலிடத்தையும் பிடித்துள்ளது.
இந்தத் தொடரில் ரோஜாவாக பிரியங்காவும், அவரது கணவர் அர்ஜூனாக ஷிபுவும் நடித்து வருகின்றனர். இருவருக்கும் சமூக வலைதளங்களில் தனிப்பட்ட முறையில் ரசிகர் பக்கங்கள் உள்ளது. அந்த அளவுக்கு இருவரது நடிப்பும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
இந்தத் தொடரில் ரோஜாதான் தனது மகள் என செண்பகத்திற்கு தெரிய வருகிறது. மேலும் தனது கணவர் டைகர் மாணிக்கமும் தனது மனைவி செண்பகத்தைப் பற்றிய உண்மைகள் தெரியவருகிறது. இதுதான் இந்தத் தொடரின் முக்கியமான நிகழ்வு. அதுவே நடந்துவிட்டதால் தொடர் முடியப்போகிறதா என்று மக்கள் சந்தேகப்பட்டனர். ஆனால் இப்பொழுது அந்தத் தொடர் முடியாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.