
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'திருச்சிற்றம்பலம்', கார்த்திக் நரேன் இயக்கத்தில் 'மாறன்' உள்ளிட்ட படங்களில் தனுஷ் நடித்துள்ளார். தற்போது செல்வராகவன் இயக்கும் 'நானே வருவேன்' படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
முன்னதாக ஹிந்தியில் அக்ஷய் குமார், சாரா அலிகானுடன் இணைந்து 'அட்ராங்கி ரே' என்ற படத்தில் தனுஷ் நடித்திருந்தார். 'ராஞ்சனா' படத்துக்குப் பிறகு இயக்குநர் ஆனந்த் எல்.ராய் உடன் தனுஷ் இணைந்துள்ளதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இதையும் படிக்க | காதலியை மணக்கும் 'வலிமை' வில்லன்: (புகைப்படங்கள்)
கரோனா ஊரடங்கு காரணமாக இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இந்த நிலையில் இந்தப் படம் நேடியாக நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று ஒரு பேட்டியில் அக்ஷய் குமார் தெரிவித்திருந்தார். இந்தப் படத்தின் தமிழ் பதிப்புக்கு நடிகர் சிவாஜி கணேசன் படத் தலைப்பான 'கலாட்டா கல்யாணம்' என்று பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
தனுஷ் ஏற்கனவே நடிகர் சிவாஜி கணேசன் படத்தலைப்பு கொண்ட 'கர்ணன்' என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் தனுஷ், ஸ்ரேயா நடித்திருந்த 'திருவிளையாடல் ஆரம்பம்' படத்துக்கும் முதலில் திருவிளையாடல் என்றே பெயரிடப்பட்டிருந்தது.
பின்னர் எதிர்ப்பு வரவே தலைப்பு திருவிளையாடல் ஆரம்பம் என்று மாற்றப்பட்டது. இந்த நிலையில் 'கர்ணன்', 'திருவிளையாடல் ஆரம்பம்' படங்கள் வெற்றிபெற்றதால் அட்ராங்கி ரே தமிழ் பதிப்பும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறும் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.