இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

'அண்ணாத்த' படத்தின் இரண்டாவது பாடல் - ரஜினிகாந்த் - நயன்தாராவின் போஸ்டருடன் சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

அண்ணாத்த படத்தின் இரண்டாவது பாடல் அக்டோபர் 9 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:19 am

DIN

அண்ணாத்த படத்தின் இரண்டாவது பாடல் அக்டோபர் 9 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிற தீபாவளியை முன்னிட்டு வெளியாகவிருக்கிற படம் 'அண்ணாத்த'. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். வெற்றி பழனிசாமி இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்தப் படத்தில் இருந்து அண்ணாத்த பாடல் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மறைந்த பிரபல பாடகர் பாலசுப்ரமணியம் பாடியுள்ள  இந்தப் பாடலை விவேகா எழுதியிருந்தார். இந்தப் படத்தில் இருந்து சாரக் காற்றே என்ற பாடல் நாளை (அக்டோபர் 9) மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

சாரக் காற்றே என்ற இந்த பாடலை சித் ஸ்ரீராம் மற்றும் ஸ்ரேயா கோஷல் இணைந்து பாடியுள்ளனர். யுகபாரதி இந்தப் பாடலை எழுதியுள்ளார். இதனை அறிவிக்கும் விதமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. போஸ்டரில் ஊஞ்சல் ஒன்றில் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா அமர்ந்து காதலுடன் பார்த்துக்கொள்வது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

அண்ணதாத்த படத்தில் ரஜினிகாந்த்தின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அண்ணன் - தங்கை உறவின் மேன்மையை சொல்லும் படமாக அண்ணாத்த இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சூரி, சதிஷ், ஜெகபதி பாபு அபிமன்யூ சிங் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.