எங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்கருணாநிதி, ஜெயலலிதா முதல் விஜய் வரை... தமிழ்நாட்டோடு தொடரும் பயணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை! 1.5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை நோக்கி தமிழக அரசு செயல்படுகிறது: முதல்வர் விஜய்அமைதியான முறையில் கூடுபவர்களுக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கை கூடாது: உச்ச நீதிமன்றம்சென்னை ஐஐடி ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் சாமி தரிசனம்! குழந்தைகள் நாள்: பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க ஏற்பாடு!சௌதி அரேபிய விமான நிலையம் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்

'எனக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருக்கிறது என்றார்கள்' - முதன்முறையாக மனம் திறக்கும் சமந்தா

விவாகரத்து தொடர்பான வதந்திகள் குறித்து முதன்முறையாக நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 

Published On :

விவாகரத்து தொடர்பான வதந்திகள் குறித்து முதன்முறையாக நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 

காதலித்து திருமணம் செய்துகொண்ட நாக சைதன்யாவும், சமந்தாவும் கடந்த வாரம் பிரியவுள்ளதாக அறிவித்தனர். இதனையடுத்து இருவரது பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. 

சமந்தா வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டது, அவர் குழந்தை பெற்றுக்கொள்ள சம்மதிக்கவில்லை என பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. அதேப் போல் நாக சைதன்யாவும் வேறு நடிகைகளுடன் தொடர்பு ஏற்பட்டதன் காரணமாகவே இருவருக்குள்ளும் பிரச்னை துவங்கியதாக ஒரு வதந்தி பரவியது. ஆனால் இருவரும் மேற்சொன்ன வதந்திகளுக்கு பதிலளிக்கவில்லை. 

இந்த நிலையில் நடிகை சமந்தா முதன்முறையாக தனது விவாகரத்து குறித்து தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக மனம் திறந்து பேசியுள்ளார். அதில், ''என்னைப் பற்றிய உங்களது உணர்வுப்பூர்வமான அக்கறை என்னை வியப்படையச் செய்துள்ளது.

என்னைப் பற்றிய தவறான செய்திகள், கதைகள் பரவிய போது நீங்கள் என் மீது காட்டிய அக்கறைக்கும், ஆதரவுக்கும் நன்றி. எனக்கு வேறு ஒருவருடன் தொடர்பு என்றார்கள், குழந்தை பெற்றுக்கொள்ள நான் சம்மதிக்கவில்லை என்றார்கள். சந்தர்ப்பவாதி என்றார்கள். இப்பொழுது நான் கர்ப்பத்தை கலைத்துவிட்டதாக கூறுகிறார்கள். 

விவாகரத்து என்பது வலி நிறைந்தது. என்னை அதில் இருந்து தனியாக மீண்டு வர அனுமதியுங்கள். ஒன்று சொல்லிக்கொள்கிறேன். எந்தவிதமான வதந்திகளும் என்னை காயப்படுத்த முடியாது'' என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.