ரஜினிகாந்த் - நயன்தாராவின் 'அண்ணாத்த' படத்தில் இருந்து வெளியான 'சாரக் காற்றே' பாடல் இதோ
ரஜினிகாந்த்தின் அண்ணாத்த படத்தில் இருந்து டி.இமான் இசையில் சாரக் காற்றே பாடல் வெளியானது


ரஜினிகாந்த்தின் அண்ணாத்த படத்தில் இருந்து டி.இமான் இசையில் சாரக் காற்றே பாடல் வெளியானது
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தில் இருந்து அண்ணாத்த அண்ணாத்த பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப் பாடலை மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருந்தார்.
சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து சார காற்றே என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. டி.இமான் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடலை சித் ஸ்ரீராம் மற்றும் ஸ்ரேயா கோஷல் இணைந்து பாடியுள்ளனர். யுகபாரதி இந்தப் பாடலை எழுதியுள்ளார்.
இந்தப் பாடல் ரஜினிகாந்த் - நயன்தாராவுக்கு இடையேயான காதலைச் சொல்லும் டூயட் பாடலாக அமைந்துள்ளது. இந்தப் பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் வகையில் இனிமையாக அமைந்துள்ளது. மேலும் டி.இமான், சித் ஸ்ரீராம், ஸ்ரேயா கோஷல் ஆகியோர் கூட்டணியில் உருவான மற்ற பாடல்களைப் போல இந்தப் பாடலும் பெரும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...