புதிதாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் பிரபல நடிகை: பரவும் தகவல்

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு மூலம் பிரபல நடிகை ஷாலு ஷாமு பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையவிருப்பதாக தகவல் பரவி வருகிறது.  
புதிதாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் பிரபல நடிகை: பரவும் தகவல்

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு மூலம் பிரபல நடிகை ஷாலு ஷாமு பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையவிருப்பதாக தகவல் பரவி வருகின்றன.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் திருநங்கையான நமிதா மாரிமுத்துவை போட்டியாளராக அறிவித்த விஜய் தொலைக்காட்சிக்கு பிரபலங்கள் பலரும் பாராட்டுகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் ஒரு திருநங்கையாக தன்னுடய துன்பங்களை நமிதா தெரிவிக்க, போட்டியாளர்கள் அனைவரும் கண்கலங்கினர். 

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக நமிதா நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அவர் நிகழ்ச்சியை விட்டு விலகியதற்கான காரணங்கள் என பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. அவர் கரோனாவால் விலகியதாகவும், உடல் நலக்குறைவு காரணமாக வெளியேறியதாகவும் கூறப்படுகின்றன. ஆனால் இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு மூலம் நடிகை ஷாலு ஷாமு கலந்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை ஷாலு ஷாமு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது. இவர் வருகிற அக்டோபர் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையவிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com