நடிகை ஸ்ரேயா தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்ரேயா. தொடர்ந்து ரஜினிகாந்த்துடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் , தனுஷுடன் குட்டி, திருவிளையாடல் ஆரம்பம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்துள்ள நராகசுரன் படம் கடந்த சில வருடங்களாக பொருளாதரா சிக்கல் காரணமாக திரைக்குவராமல் இருக்கிறது. இந்த நிலையில் நடிகை ஸ்ரேயா தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதை முதன்முறையாக அறிவித்துள்ளார்.
கர்ப்பமாக இருந்ததை அவர் அறிவிக்காததால் இந்த தகவல் அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறத்து அவர் வெளியிட்டுள்ள விடியோ பதிவில், ''எங்களுக்கு 2020 கரோனா ஊரடங்கு மகிழ்ச்சிகரமான காலகட்டமாக அமைந்தது. எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. கடவுளுக்கு நன்றி'' என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிரேட்டா் நொய்டா வணிக வளாகத்தின் 9-வது மாடியில் திடீா் தீ

காவிரிப் பாலம் அடைப்பு: போக்குவரத்து மாற்றம்!

வரையறுக்கப்படாத ஊதியம் பெற்றவருக்கும் சிறப்பு ஓய்வூதியம்: அரசு ஓய்வூதியா்கள் சங்கம் கோரிக்கை

அந்தியோதயா அன்னயோஜனா: ரேஷனில் ஒருவருக்கு 7 கிலோ உணவு தானியம் அளிக்க திட்டம்
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



