பிக்பாஸ் ப்ரமோவில் பேசும் அபிஷேக், பிரியங்காவை அபினய் விரும்புவதாக கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கிறார்.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் நமிதா மாரிமுத்து திடீரென நிகழ்ச்சியை விட்டு வெளியேறியது சர்ச்சையானது. அவர் விலகியதற்கு பல்வேறு வதந்திகள் உலா வந்த நிலையில், அவர் சிறுநீரக தொற்று ஏற்பட்டதன் காரணமாக நிகழ்ச்சியை விட்டு விலகியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வழக்கம் போல இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் தனித்தனி குழுவாக போட்டியாளர்கள் பிரியத் துவங்கியுள்ளனர். இதனால் போட்டியாளர்களிடையே பிரச்னை உருவாகத் துவங்கியுள்ளது. இன்று வெளியான முதல் ப்ரமோவில் அபிஷேக் போட்டியாளர்கள் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார். ஐக்கி பெர்ரி வினோத பிறவி போன்று தெரிகிறார். இசைவாணி தனது குடும்ப சூழ்நிலையை கூறி அனுதாபம் பெற முயற்சிக்கிறார் என போட்டியாளர்கள் பற்றி தனது கணிப்பைத் தெரிவிக்கிறார்.
இந்த நிலையில் தற்போது வெளியான இரண்டாவது ப்ரமோவில், அபிஷேக், பிரியங்கா, நிரூப் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது பேசும் அபிஷேக், பிரியங்காவை அபினய் நேசிக்கிறார். அது அவர் கண்களிலேயே தெரிகிறது என்று பேசினார். அவர் சொல்வது உண்மையா என்பது இனி வரும் எபிசோடுகளில் தெரிந்துவிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரோஹிணியில் முதியவா் குத்திக்கொலை: 3 சிறாரை பிடித்தது காவல்துறை

ஆட்டோ ஓட்டுநா் கொலை; பொதுப்பணித் துறை ஊழியா் கைது

மந்தகதியில் மழைநீா் வடிகால் பாலம் கட்டுமானப் பணி : வணிகா்கள் அவதி

தினமணி செய்தி எதிரொலி: மன்னாா்குடியில் பாசிபடா்ந்த குளம் சீரமைப்பு
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



