
விரைவில் தர்மதுரை படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக அதன் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் அறிவித்துள்ளார்.
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான தர்மதுரை திரைப்படம் நல்ல வெற்றியை பதிவு செய்தது. இந்தப் படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை பெரும் பக்கபலமாக அமைந்தது.
இந்தப் படத்தில் எந்தப் பக்கம் காணும் போதும் என்ற பாடலுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை வைரமுத்து பெற்றார். விஜய் சேதுபதியின் திரையுலக வாழ்வில் மிக முக்கியமான படமாக தர்மதுரை படம் அமைந்தது.
இந்தப் படத்தை ஸ்டுடியோ 9 சார்பாக ஆர்.கே.சுரேஷ் தயாரித்திருந்தார். இந்த நிலையில் நடிகர் ஆர்.கே.சுரேஷ், தர்மதுரை படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாக அறிவித்துள்ளார். ஆனால் இந்தப் படத்தில் யார் நடிக்கிறார்கள் உள்ளிட்ட விவரங்களை அவர் குறிப்பிடவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.