

பட்டியலினத்தவர் குறித்து தவறாக பேசிய நடிகை யுவிகா சௌத்ரி கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஹிந்தி பிக்பாஸ் 9வது சீசன் மூலம் பிரபலமடைந்த நடிகை யுவிகா சௌத்ரி கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு விடியோவில் பட்டியலினத்தவர் குறித்து தவறான வார்த்தையை பிரயோகித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த நடிகை தனது ட்விட்டர் பக்கத்தில், அந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது எனவும் நான் யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னித்துவிடும்படியும் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் அவர் ஹரியானா மாநில காவல்துறையால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் இதுகுறித்து அவரது வழக்கறிஞர் தெரிவித்ததாவது, நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நடிகை யுவிகா விசாரணையில் கலந்துகொண்டார். தற்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.