கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திரையரங்க உரிமையாளர்களின் திடீர் முடிவு: திரைப்படங்கள் வெளியாவதில் சிக்கல்

ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் திரையரங்கில் வெளியிடப்படாது என திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 5:17 am

ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் திரையரங்கில் வெளியிடப்படாது என திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இரண்டாவது அலையில் கரோனா பரவல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன் காரணமாக, ஓடிடி தளங்கள் தயாரிப்பாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தன. படங்கள் சரியான காலகட்டத்தில் வெளியாகவும், ரசிகர்கள் பாதுகாப்பாக படங்களை வீட்டில் இருந்தபடியே பார்ப்பதற்கும் ஓடிடி தளங்கள் பெரிதும் உதவின.

இந்த நிலையில் தற்போது கரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதால், தமிழகத்தில் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டன. இதனையடுத்து திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டன. 

ஆனால் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களை திரையரங்கில் வெளியிடுவதில்லை என்ற முடிவை திரையரங்க உரிமையாளர்கள் எடுத்துள்ளனர்.

மேலும், திரையரங்கில் வெளியாகி 4 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும் என்ற முடிவுக்கு சம்மதிக்கும் படங்களை மட்டுமே திரையரங்குகளில் திரையிடப்படும் என்றும் அவர்கள் உறுதியாக உள்ளனர்.

தற்போது பல தயாரிப்பு நிறுவனங்கள், தங்கள் படங்களை வெளியிட ஓடிடி தளங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளனர். இந்த நிலையில் திரையரங்க உரிமையாளர்களின் முடிவால் அந்தப் படங்கள் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.