வெளியானது 'மணி ஹெய்ஸ்ட்’: ரசிகர்கள் கொண்டாட்டம்

பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் பெரும் வரவேற்பு பெற்ற மணிஹெய்ஸ்ட் தொடர் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.
வெளியானது 'மணி ஹெய்ஸ்ட்’: ரசிகர்கள் கொண்டாட்டம்
வெளியானது 'மணி ஹெய்ஸ்ட்’: ரசிகர்கள் கொண்டாட்டம்

பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் பெரும் வரவேற்பு பெற்ற மணிஹெய்ஸ்ட் தொடர் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வங்கி திருட்டை அடிப்படையாகக் கொண்ட ‘மணி ஹைஸ்ட்’ வெப்சீரிஸின் முதலிரண்டு பாகங்கள் 2017-இல் வெளியாகின. அடுத்த இரண்டு பாகங்கள் 2019-2020-இல் வெளியாகின. இதன் கதாபாத்திரங்கள் இந்தியா உள்பட உலகளவில் மிகவும் பிரபலமாகின.

கரோனா பொதுமுடக்கம் அமலானபோது இந்த இணையத் தொடர் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்தது. வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்ட இந்த வெப்சீரிஸுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உருவாகியது.

இந்நிலையில் மணி ஹெய்ஸ்டின் 5-வது பாகம் தலா 5 அத்தியாயங்கள் என இரண்டு பகுதிகளாக வெளியாவதாக அறிவிக்கப்பட்டு முதல் பகுதி இன்று வெளியானது.

மணி ஹெய்ஸ்டின் முன்னணி கதாபாத்திரமான புரபசர் கைதாவதாக 4ஆம் பாகம் முடிவடைந்த நிலையில் அடுத்த பாகம் வெளியாகியுள்ளது ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணி ஹெய்ஸ்ட் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்கள் இணையத்தில் அந்தத் தொடருக்கு வரவேற்பு தெரிவித்து கொண்டாடி வருகின்றனர். மணி ஹெய்ஸ்டின் 5ஆம் பாகத்தின் 2-ம் பகுதி டிசம்பர் 3 தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com