நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ரஷியாவில் 5,000 கி.மீ பயணம் செய்த அஜித்: புகைப்படங்கள் வைரல்

ரஷியாவில் நடிகர் அஜித் பைக்குடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 5:01 am

DIN

ரஷியாவில் நடிகர் அஜித் பைக்குடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ரஷியாவில் நடைபெற்று வந்த 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதனையடுத்து நடிகர் அஜித் இந்தியா திரும்பினார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதால் படம் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் வெளியாகலாம் அல்லது அடுத்த வருடம் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்துடன் பொங்கல் தினத்தை முன்னட்டு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க | கதிர் பட டீசர் வெளியீடு

கடைசியாக கடந்த 2014 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜில்லா மற்றும் பீஸ்ட் திரைப்படங்கள் வெளியாகியிருந்தது. அப்படி இரண்டு படங்களும் ஒரே தினத்தில் வெளியானால் திரையரங்குகளில் திருவிழா போன்று காட்சியளிக்கும். கரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் புத்துயிர் பெறும் உறுதி. 

Story image

இந்த நிலையில் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து நடிகர் அஜித் ரஷியாவில் 5,000 கி.மீ பயணம் செய்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. பைக்குடன் அவர் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.