ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

எது உண்மையான வளர்ச்சி? வெளியானது லாபம் திரைப்பட டிரைலர்

சமீபத்தில் மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனின் கடைசிப்படமான 'லாபம்' திரைப்படத்தின் டிரைலர் வெள்ளிக்கிழமை வெளியானது.

News image

எது உண்மையான வளர்ச்சி? வெளியானது லாபம் திரைப்பட டிரைலர்

Updated On :3 செப்டம்பர் 2021, 10:58 am

DIN

சமீபத்தில் மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனின் கடைசிப்படமான 'லாபம்' திரைப்படத்தின் டிரைலர் வெள்ளிக்கிழமை வெளியானது.

இயற்கை, புறம்போக்கு எனும் பொதுவுடமை, ஈ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் ஜனநாதன். அதனைத் தொடர்ந்து நடிகர்  விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் லாபம் என்கிற படத்தை இயக்கியுள்ளார்.  விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷ்ருதி ஹாசன் நடித்துள்ளார். இசையமைப்பாளர் இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை 7C என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. 

லாபம் திரைப்படத்தின் இயக்குநர் ஜனநாதன் சமீபத்தில் மரணம் மற்றும் கரோனா சூழல் காரணமாக  படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. எனினும் நீண்ட முயற்சிக்கு பின் லாபம் திரைப்படம் செப்டம்பர் 9ஆம் தேதி  திரையரங்குகளில் லாபம் திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் லாபம் திரைப்படத்தின் டிரைலர் வெள்ளிக்கிழமை வெளியானது. நடிகர் விஜய்சேதுபதி டிரைலரை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார். இடதுசாரி கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.