
நடிகை கன்னிகா கரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டுள்ளார்.
தொலைக்காட்சித் தொடரில் நடிகையாக அறிமுகமான கன்னிகா - சாட்டை 2, ராஜவம்சம் எனப் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். கவிஞர் சினேகனை ஜூலை மாதம் திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் நடிகை கன்னிகா, கரோனா தடுப்பூசியின் 2-வது தவணையைச் செலுத்திக்கொண்டுள்ளார். பொதுவாக நடிகைகளில் பெரும்பாலானோர் தனியார் மருத்துவமனைகளில் தான் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டுள்ளார்கள். ஆனால், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டு, அத்தகவலை ட்விட்டரில் தெரிவித்துள்ளார் கன்னிகா. பிறகு இயக்குநர் அமீரின் குடும்பத்தினருடன் இணைந்து சினேகனும் கன்னிகாவும் உணவருந்திய புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.