பிரபல சின்னத்திரை நடிகர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

பிரபல மலையாள சின்னத்திரை நடிகர் ரமேஷ் வலியசாலா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
பிரபல சின்னத்திரை நடிகர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு
Published on
Updated on
1 min read

பிரபல மலையாள சின்னத்திரை நடிகர் ரமேஷ் வலியசாலா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளத்தைச் சேர்ந்த பிரபல டிவி நடிகர் ரமேஷ் வலியசாலா அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவருக்கு வயது 54.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்டமாக ரமேஷ் வலியசாலாவின் மரணம் தற்கொலை என காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

ரமேஷ் தனது இரண்டாவது மனைவி மற்றும் மகனுடன் வலியசாலாவில் வசித்து வந்துள்ளார். அவருக்கு கரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதாரச் சிக்கல் இருந்து வந்துள்ளது. தற்கொலை செய்துகொள்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன் கூட ஒரு சின்னத்திரை படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று (சனிக்கிழமை) அதிகாலை ரமேஷின் மனைவி கண் விழித்துப் பார்த்தபோது, அவர் தனது வீட்டில் மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். அவரைப் பார்த்த அதிர்ச்சியடைந்த அவரது மனைவி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

கடந்த 20 வருடங்களாக ரமேஷ் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்துள்ளார். ரமேஷின் மரணம் அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(உங்களுக்கு தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டால், உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். இல்லையெனில் சினேகா அமைப்பு - 04424640050 என்று எண்ணுக்கு அழைத்து பேசுங்கள். )
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com