
நடிகர் சூர்யா தயாரிக்க இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கத்தில் உருவான ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ திரைப்படம் நாளை(செப்-24) வெளியாகிறது.
இதையும் படிக்க | 'பாக்கியலட்சுமி' கதாநாயகிக்கு இவ்வளவு பெரிய மகளா?: வைரலாகும் விடியோ
தொடர்ந்து நான்கு படங்களைத் தயாரித்து ஓடிடியில் வெளியிடும் முயற்சியில் இருக்கும் ‘2டி எண்டர்டைன்மெண்ட்’ நிறுவனம் தயாரித்த ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ படம் முழுக்க முழுக்க கிராமப் பின்னணியில் காளை மாடுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
நடிகர்களாக மிதுன் மாணிக்கம் , ரம்யா பாண்டியன் , வாணி போஜன் ,வடிவேல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படம் நாளை (செப்-24) அன்று அமெசான் பிரைமில் வெளியாக இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.