
திரையுலகில் 30வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நடிகர் அஜித் தனது ரசிகர்களுக்கு செய்தி வெளியிட்டுள்ளார்.
நடிகர் அஜித் தெரிவித்ததாக அவரின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்தியில்,
“ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் நாணயத்தின் மூன்று பக்கங்கள். ரசிகர்களின் அன்பையும், விமர்சகர்களின் விமர்சனங்கள் மற்றும் நடுநிலையாளர்களின் கருத்துகளை ஏற்றுக்கொள்கிறேன். வாழு, வாழவிடு. அனைவருக்கும் நிபந்தனையற்ற அன்பை வழங்குகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் கடந்த 29 வருடங்களாக பல்வேறு இயக்குநர்களின் படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.