
நடிகர் அஜ்மல்
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகவுள்ள பிசாசு 2 திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிகர் அஜ்மல் நடித்துள்ளார்.
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிக்கும் திரைப்படம் பிசாசு 2.கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். பிசாசு முதல் பாகம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற நிலையில் பிசாசு 2 திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
இதையும் படிக்க | எதையோ சாதித்ததைப் போல் ஒரு உணர்வு': விடியோ வெளியிட்டார் ராய் லக்ஷ்மி
இந்நிலையில் இயக்குநர் மிஷ்கினின் அஞ்சாதே திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகர் அஜ்மல். அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற அஜ்மல் சமீபத்தில் வெளியான நெற்றிக்கண் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதையும் படிக்க | சொன்ன வாக்கைக் காப்பாற்றுவாரா நடிகர் அஜித் ? - பிரபலத்தின் பதிவால் ரசிகர்கள் ஆவல்
இவற்றுக்கு மத்தியில் பிசாசு 2 திரைப்படத்தில் நடிகர் அஜ்மல் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநரின் திரைப்படத்திலேயே சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் அஜ்மல் ரசிகர்களின் வரவேற்பை எதிர்நோக்கியுள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...