
வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'செல்ஃபி'. இந்தப் படத்தில் இயக்குநர் கௌதம் மேனன் வில்லனாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடிக்க, இயக்குநர் சுப்ரமணிய சிவா, வித்யா பிரதீப், வாகை சந்திரசேகர், தங்கதுரை, குணநிதி, சங்கிலி முருகன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தை மதி மாறன் இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | இயக்குநர் பா.ரஞ்சித் உடன் இணையும் விக்ரம்!
இந்த டிரெய்லரில் அரசியல்வாதியாக இருக்கும் சங்கிலி முருகன், ''என்னப்பா நீட் நீட்டுனு போட்டு உயிரெடுக்கிறாங்க'' என்று கேட்கிறார். அதற்கு பதில் சொல்லும் இயக்குநர் கௌதம் மேனன், ''நீட்டை தடுக்க முடியாது. ஆனால் அதை வைத்து காசு பார்க்கலாம்'' என வசனம் பேசுகிறார். இந்த வசனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.