
பிரபல தமிழ் சினிமா விமர்சகர் மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆன்டி இந்தியன். மூன் சிக்சர்ஸ் சார்பாக ஆதவன் பவா இயக்கியுள்ள இந்தப் படம் கடந்த வாரம் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆன்டி இந்தியன் படத் தயாரிப்பாளர் ஆதம் பாவா புகார் ஒன்றை அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
''10 ஆம் தேதி இரவு பெரியகுளம் பார்வதி திரையரங்கில், பாஜகவின் நகர செயலாளர் ராஜபாண்டி என்பவர், தன்னுடைய அடியாட்களுடன் சென்று படத்தை நிறுத்த சொல்லி தகராற்றில் ஈடுபட்டிருக்கிறார். பொதுவாக இந்த மாதிரி புகார் வந்தால், அதனை படத்தை பிரபலபடுதத் பயன்படுத்துவார்கள் என கூறி இணையதளம் மூலமாக இயக்குநர் மாறன் புகார் அளித்தார். ஆனால் மறுநாள் முதல் அந்த திரையரங்கில் ஆன்டி இந்தியன் திரைப்படம் திரையிடப்படவில்லை.
இதையும் படிக்க | இன்று வெளியாகும் 'வலிமை' பட ப்ரமோ காட்சிகள் ?
மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் இந்தப் படத்தை திரையிடக் கூடாது என மிரட்டல் விடுக்கிறார்கள். இதுதொடர்பாக காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்திருக்கிறோம்''. என்றார்.
ஆன்டி இண்டியன் படத்தை திரையிட விடாமல் தடுத்த பாஜக நகர செயலாளர் ராஜபாண்டி மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார் தயாரிப்பாளர் ஆதம் பாவா.
— Blue Sattai Maran (@tamiltalkies) December 13, 2021
Link: https://t.co/s8U3AiTTgJ
Source: Sun News.#AntiIndian #Bluesattaimaran pic.twitter.com/UlWYoLbLsn