வாடா தம்பி ! - சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்': ஜி.வி.பிரகாஷ் - அனிருத் பாடிய பாடல் வெளியானது
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். பாண்டிராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். நம்ம வீட்டுப் பிள்ளை வெற்றிக்கு பிறகு சன் பிக்சர்ஸ் மற்றும் இயக்குநர் பாண்டி ராஜ் இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க | ஜலபுல ஜங்கு : அனிருத் இசையில் சிவகார்த்திகேயனின் டான் பாடல் ப்ரமோ
இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் வருகிற பிப்ரவரி 4 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து அனிருத் - ஜி.வி.பிரகாஷ் பாடிய வாடா தம்பி பாடல் வெளியானது. இந்தப் பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.