
2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரிக்கும் விருமன் கார்த்தி நாயகனாக நடித்து வருகிறார். முத்தையா இந்தப் படத்தை இயக்குகிறார்.
யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்கிறார்.
இந்த நிலையில் கடந்த மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வைகை அணையில் நடைபெற்றது. அப்போது அணையின் நீர்மட்டம் 69.40 அடியாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் 2350 கனட அடிநீர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வந்தததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் ஹிப்ஹாப் தமிழாவின் 'அன்பறிவு'
அணையின் நீர் மட்டும் உயர்ந்திருக்கும் நிலையில் பொதுமக்களுக்கே அனுமதி வழங்கப்படாது. ஆனால் படப்பிடிப்பு நடைபெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டம் நிர்வாகம் அல்லது தேனி பிஆர்ஓவின் அனுமதியின் பேரிலோ இந்தப் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால் இது முக்கிய பிரச்னையாக உருவெடுத்ததற்கான காரணம் இந்தப் படத்தை தயாரிப்பாளர் சூர்யா என்பது தான். ஜெய் பீம் படம் ஒரு தரப்பினருக்கு சூர்யாவின் மீது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே விருமன் படத்தின் பிரச்னை பெரிதாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.