
சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பாக டி.ஜி.தியாகராஜன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் அன்பறிவு. ஹிப்ஹாப் தமிழா இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தை அஷ்வின் ராம் இயக்கியுள்ளார்.
திரையரங்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எப்பொழுது வெளியாகும் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : நடிகர் அர்ஜுனுக்கு கரோனா பாதிப்பு
ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி நடித்த சிவக்குமாரின் சபதம் நேரடியாக திரையரங்கில் வெளியாகியிருந்தது. இந்தப் படத்தையும் சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரித்திருந்து. அந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் போதிய வரவேற்பு கிடைக்காததால் தயாரிப்பு தரப்பு இத்தகைய முடிவெடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Anbai perukki, Arivai vithaithu, kudumbathudan kondaadi magizha, ungalin peraadharavodu namadhu @DisneyPlusHS -il #AnbarivuOnHotstar #DisneyPlusHotstarMultiplex #SambavamStarts@SathyaJyothi_ @actornepoleon @dir_Aswin @madheshmanickam @vidaarth_actor @kashmira_9 pic.twitter.com/FSEPSbuqPW
— Hiphop Tamizha (@hiphoptamizha) December 15, 2021
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...