
மாயா படத்துக்கு பிறகு இயக்குநர் அஸ்வின் சரவணன் - நயன்தாரா இணைந்திருக்கும் படம் கணெக்ட். இந்தப் படத்தை ரௌடி பிக்சர்ஸ் சார்பாக விக்னேஷ் சிவன், நயன்தாரா இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்தப் படத்தில் ஹிந்தி நடிகர் அனுபம் கேர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் நடிகர் சத்யராஜ் இந்தப் படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜா ராணி படத்துக்கு பிறகு சத்யராஜ், நயன்தாரா இந்தப் படத்தில் இணைந்து நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | நடிகா் வடிவேலுக்கு ஒமைக்ரான் அறிகுறி
இந்தப் படத்துக்கு மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவு செய்ய, பிருத்வி சந்திரசேகர் இசையமைக்கிறார். காவ்யா ராம்குமாருடன் இணைந்து இயக்குநர் அஷ்வின் சரவணன் திரைக்கதை அணைத்துள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...