
நடிகர் கமல்ஹாசன் தற்போது பெங்களூருவில் நடைபெறும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இதனையடுத்து சமீபத்தில் மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறியுள்ளார். அவருடன் நடிகர் ரமேஷ் அரவிந்த் உடனிருந்தார்.
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த அக்டோபர் மாதம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இளம் வயதில் அவர் மரணமடைந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தமிழ் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று புனித் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் தற்போது அஞ்சலி செலுத்தியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசனுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக விக்ரம் படத்தின் படப்பிடிப்பு பாதியில் நின்றது. தற்போது அவர் பூரண குணமடைந்ததையடுத்து விக்ரம் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.