
ராஜமௌலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'ஆர்ஆர்ஆர்'. இந்தப் படம் வருகிற ஜனவரி 7 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் படத்தின் விளம்பரப் பணிகளில் இயக்குநர் ராஜமௌலி, ஜுனியர் என்.டி.ஆர்., ராம் சரண் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மூவரும் பங்கேற்றிருந்தனர். அப்போது நடிகர் விஜய் பற்றி பேசுமாறு அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது பேசிய ஜுனியர் என்டிஆர், விஜய் ஒரு சூப்பர் ஸ்டார். ஆனால் அதனை அவர் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார். நல்ல மனிதர். நிறைய முறை அவருடன் பேசியிருக்கிறேன்.
இதையும் படிக்க | ஜனவரியில் வலிமையுடன் இயக்குநர் வினோத்தின் மற்றொரு படமும் வெளியாகிறது!
மாஸ்டர் படம் பார்த்த பிறகு அவருடன் தொலைபேசியில் உரையாடினேன். அவர் குறித்து எவ்வளவு பேசினாலும், அது போதாது. அவருக்கு கிடைத்த புகழை தள்ளி வைத்துவிட்டு எப்பொழுதும் ஒரு சாதாரணமான மனிதராக இருப்பார்.
என்னை விட வயதில் மூத்தவர். அவருடைய நடனத்துக்கு நான் மிகப்பெரிய ரசிகன். என்று தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சி நாளை (ஜனவரி 1) மதியம் 2.30க்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது.
THALAPATHY
— Vijay Television (@vijaytelevision) December 31, 2021
RRR Special - நாளை மதியம் 2:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #RRRSpecial #Vijay #NewYearSpecial #NewYear2022 pic.twitter.com/fu0NJMmvE9
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...