இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

நடிகை நிரஞ்சனி அகத்தியனை மணந்தார் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' இயக்குநர் தேசிங் பெரியசாமி (படங்கள்)

தேசிங் பெரியசாமி - நிரஞ்சனியின் திருமணம் புதுச்சேரியில் உள்ள...

News image
Updated On :25 பிப்ரவரி 2021, 9:49 am

பிரபல இயக்குநர் அகத்தியனின் இளைய மகளும் நடிகையுமான நிரஞ்சனியை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குநர் தேசிங் பெரியசாமி திருமணம் செய்துள்ளார். 

துல்கர் சல்மான், ரிது வர்மா, நிரஞ்சனி  அகத்தியன் நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் கடந்த வருடம் பிப்ரவரி 28 அன்று வெளியானது. ரசிகர்களின் வரவேற்பு பெற்ற இந்தப் படத்தைப் பாராட்டிய ரஜினி, எனக்கும் ஒரு கதை தயார் செய்யுங்கள். நிஜமாகவே சொல்கிறேன். யோசித்து வையுங்கள் என்று தேசிங் பெரியசாமியிடம் போனில் கூறினார்.

நிரஞ்சனி நடித்த முதல் படம் - கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இதற்கு முன்பு வாயை மூடி பேசவும், சிகரம் தொடு, காவியத் தலைவன், கபாலி போன்ற படங்களில் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார். 

இந்நிலையில் தேசிங் பெரியசாமி - நிரஞ்சனியின் திருமணம் புதுச்சேரியில் உள்ள ரிசார்டில் இன்று நடைபெற்றுள்ளது. இத்திருமணத்தில் திரையுலகப் பிரபலங்கள் பலரும் பங்கேற்றார்கள். திருமண நிகழ்வின் புகைப்படங்கள் ட்விட்டர், இன்ஸ்டகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.