
தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் படத்துக்குப் பிறகு ஆமிர் கான் நடிக்கும் படம் - லால் சிங் சத்தா. ஆறு ஆஸ்கர் விருதுகளை வென்ற ஹாலிவுட் படமான ஃபாரஸ்ட் கம்பின் ரீமேக் இது.
இந்தப் படத்தில் ஆமிர் கானின் ஜோடியாக கரீனா கபூர் நடிக்கிறார். இருவரும் இதற்கு முன்பு த்ரீ இடியட்ஸ், தலாஸ் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். சீக்ரெட் சூப்பர்ஸ்டார் படத்தை இயக்கிய அத்வைத் சந்தன் இப்படத்தை இயக்குகிறார்.
ஃபாரஸ்ட் கம்ப் படத்தில் இடம்பெற்ற பெஞ்சமின் புஃபோர்ட் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் அப்படத்திலிருந்து விலகினார். இந்நிலையில் இப்படத்தின் பிரபல தெலுங்கு நடிகரும் நடிகை சமந்தாவின் கணவருமான நாக சைதன்யா நடிக்கிறார். இதன்மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகும் நாக சைதன்யா, ஆமிர் கானுடன் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படத்தைச் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.