இடைத்தேர்தலில் தவெக பணப்பட்டுவாடா! தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்!அமெரிக்காவில் சீன அதிபர்: விமான நிலையம் சென்று வரவேற்றார் டிரம்ப்!ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தால் மக்களின் மருத்துவச் செலவு குறைந்தது- பிரதமா் மோடிஐ.நா.வில் மீண்டும் காஷ்மீா் பிரச்னையை எழுப்பிய துருக்கி அதிபா் டெங்கு தடுக்க பள்ளிகளில் தொடா் தூய்மைப் பணிகள்: கல்வித் துறை உத்தரவு காஷ்மீா் குறித்து இஸ்லாமிய நாடுகள் கருத்து: இந்தியா நிராகரிப்பு தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை- அமேசான் உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை கர்நாடகம்: ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜிநாமா; தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்காததால் அதிருப்தி தோ்தல் ஆணையா்கள் கருத்து மோதலா? ஆணையம் விளக்கம்

நவரசா: டிரெய்லர் வெளியீடு

தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகர்களும் இயக்குநர்களும் ஒன்றிணைந்து நவரசா என்கிற படத்தை உருவாக்கியுள்ளார்கள்.

Published On :


தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகர்களும் இயக்குநர்களும் ஒன்றிணைந்து நவரசா என்கிற படத்தை உருவாக்கியுள்ளார்கள். பிரபல இயக்குநர் மணி ரத்னமும் ஜெயேந்திராவும் தயாரித்துள்ள இப்படத்தை 9 இயக்குநர்கள் இயக்கியுள்ளார்கள். 

9 உணர்வுகளையும் 9 கதைகளையும் கொண்ட இப்படத்தை பிரியதர்ஷன், கெளதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ், கார்த்திக் நரேன், ரதிந்திரன், பிஜாய் நம்பியார். வசந்த் சாய், சர்ஜுன் கே.எம்., அரவிந்த் சாமி ஆகியோர் இயக்கியுள்ளார்கள். 

சூர்யா, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், சித்தார்த், யோகி பாபு, அரவிந்த் சாமி, பிரசன்னா, ரேவதி, பார்வதி, ரித்விகா உள்ளிட்ட பிரபல நடிகர், நடிகைகள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.  

ஏ.ஆர். ரஹ்மான், இமான், ஜிப்ரான், கோவிந்த் வசந்தா போன்ற பிரபல இசையமைப்பாளர்களும் சந்தோஷ் சிவன் உள்ளிட்ட பிரபல ஒளிப்பதிவாளர்களும் இந்தப் படத்தில் பணியாற்றியுள்ளார்கள்.

நவரசா படத்தைத் தயாரித்து அதிலிருந்து கிடைக்கும் வருமானத்திலிருந்து ரூ. 10 கோடியை பெப்சி தொழிலாளர்களுக்கு இயக்குநர் மணி ரத்னம் வழங்குகிறார். பெப்சி திரைப்பட உறுப்பினர்கள் 12,000 பேருக்கு வங்கி மூலமாக மாதம் ரூ. 1500 வீதம் 6 மாதங்களுக்குக் கொடுக்கிறார்கள்.

இந்தப் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 6 அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் மொழிகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நவரசா படத்தில் பணியாற்றிய பிரபல கலைஞர்கள் உள்பட அனைவரும் இதற்காக ஊதியம் பெறவில்லை. திரைப்படத் தொழிலாளர்களின் நலனுக்காக அனைவரும் முன்வந்து இப்படத்தில் பணியாற்றியுள்ளார்கள். நவரசா படத்தில் உள்ள ஒன்பது கதைகள் ஒவ்வொன்றும் 30 முதல் 40 நிமிடங்கள் வரை ஓடக்கூடியவை. எனவே ஒட்டுமொத்த படமும் 5 மணி நேரம் ஓடும் என்பதால் ஓடிடியில் நேரடியாக வெளியாகிறது. முதலில் ரூ. 10 கோடி வருமானம் கிடைக்கும் எனத் திட்டமிட்டாலும் தற்போது குறைந்தபட்சமாக ரூ. 12 கோடியும் அதிகபட்சமாக ரூ. 15 கோடி வரைக்கும் வருமானம் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் அனைத்துத் தொகையையும் திரைப்படத் தொழிலாளர்களுக்கு வழங்க மணி ரத்னமும் ஜெயேந்திராவும் முடிவெடுத்துள்ளார்கள். பூமிகா அறக்கட்டளை மூலமாக இந்தத் தொகை திரைப்படத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

நவரசா படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.