

சிவாஜி படத்தில் இடம்பெற்ற பல்லேலக்கா பாடலுக்கு வெளிநாட்டினர் நடனமாடியதன் விடியோவை ஏ.ஆர். ரஹ்மான் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 2007-ல் வெளியான படம் - சிவாஜி. தயாரிப்பு - ஏவிஎம் நிறுவனம். இசை - ஏ.ஆர். ரஹ்மான். ரஜினியின் தொடக்கப் பாடலான பல்லேலக்கா-வை நா. முத்துக்குமார் எழுதினார்.
டென்மார்க் நாட்டின் தலைநகரான கோபன்ஜேகனில் பல்லேலக்கா பாடலை உள்ளூர் மக்களில் சிலர் ஆடிப் பாடியுள்ளார்கள். இதன் விடியோவை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான். வெளிநாட்டினரின் குரலில் பல்லேலக்கா பாடல் வித்தியாசமாகத் தெரிவதுடன் தமிழ் வரிகளைச் சரியாகப் பாட அவர்கள் எடுத்த முயற்சியும் பாராட்டுக்குரியதாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.