வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

குக் வித் கோமாளி அஸ்வினின் 'என்ன சொல்ல போகிறாய்': அனிருத் - அறிவு இணைந்துள்ள கியூட் பொண்ணு பாடல் இதோ

அஸ்வினின் என்ன சொல்லப் போகிறாய் படத்தில் அனிருத் பாடிய கியூட் பொண்ணு பாடல் வெளியானது. 

News image
Updated On :20 நவம்பர் 2021, 1:42 pm

சின்னத்திரை தொடர்களில் நடித்தன் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அஸ்வின் குமார். 'குக் வித் கோமாளி' சீசன் 2 நிகழ்ச்சி அவருக்கு மாபெரும் புகழைப் பெற்று தந்தது. இதன் காரணமாக அவரது தனிப் பாடல்கள் யூடியூபில் மில்லியன் கணக்கான பார்வையாளர்களைப் பெற்றது. 

இந்த நிலையில் அவர் 'என்ன சொல்ல போகிறாய்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அஸ்வினுக்கு ஜோடியாக தேஜு அஸ்வினி, அவந்திகா மிஷ்ரா ஆகியோர் நடித்துள்ளனர். குக் வித் கோமாளி மூலம் பிரபலமான புகழ் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளனர். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். டிரிடென்ட் ஆர்ட்ஸ் சார்பாக ஆர்.ரவிந்திரன் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் இருந்து கியூட் பொண்ணு என்ற பாடல் வெளியாகியுள்ளது. அறிவு எழுதியுள்ள இந்தப் பாடலை அனிருத் மற்றும் விவேக் சிவா பாடியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.