
ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'பேச்சுலர்' டிசம்பர் 3 ஆம் தேதியும், 'ஜெயில்' திரைப்படம் டிசம்பர் 9 ஆம் தேதியும் திரைக்கு வரவிருக்கின்றன. இதில் பேச்சுலர் பட டிரெய்லர் சில நாட்களுக்கு முன் வெளியாகி சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
பேச்சுலர் படத்தல் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக திவ்யபாரதி நடிக்க, முனிஷ்காந்த், பகவதி பெருமாள் உள்ளிட்ட முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு சித்து குமார் பின்னணி இசையமைத்துள்ளார்.
இதையும் படிக்க | வில்லனுக்கு 'தனுஷ்'கோடி என்ற பெயர் வைத்ததன் பின்னணி? : வெங்கட் பிரபு அதிரடி
இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்தில் இருந்து இளநீரை இலகுவாக திறந்து அதில் மதுபானம் கலந்து குடிப்பது போன்ற காட்சியை பகிர்ந்திருந்தார். ரசிகர் ஒருவர், இந்த கருவி எங்கு கிடைக்கும் ? விலை எவ்வளவு என்று கேள்வி எழுப்பியிருந்தார். அவருக்கு பதிலளித்த ஜி.வி.பிரகாஷ், இது வெறும் ரூ.200 தான். மலிவான விலையில் கிடைக்கும். என்று தெரிவித்துள்ளார்.
Only 200 rupees I think …. malivaana vilayil kidaikkum . https://t.co/ETHjbE2UuM
— G.V.Prakash Kumar (@gvprakash) November 29, 2021