
லொள்ளு சபா மூலம் புகழ்பெற்ற ஜீவா கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எங்க வீட்டு மீனாட்சி என்ற தொடரில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
சந்தானம் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியவுடன் அவருக்கு பதிலாக லொள்ளு சபா நிகழ்ச்சியில் கதாநாயகனாக நடித்து வந்தவர் ஜீவா. எந்த நடிகர் வேடத்தில் நடித்தாலும் அந்த நடிகரின் குரல், உடல்மொழி ஆகியவற்றை சிறப்பாக கண்முன் கொண்டுவந்தவர் ஜீவா. அவரது நடிப்பு ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.
லொள்ளு சபா நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பினால் குருவி, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து கோச்சடையான் படத்தில் சில காட்சிகளில் ரஜினிகாந்த்தை போல நடித்திருந்தார். கடைசியாக சந்தானத்துடன் ஜீவா இணைந்து நடித்த பிஸ்கோத் திரைப்படம் கடந்த வருடம் வெளியாகியிருந்தது. மேலும் கொம்பு என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் இவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் எங்கள் வீட்டு மீனாட்சி என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்தத் தொடர் வருகிற அக்டோபர் 18 முதல் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.