
இமான் அண்ணாச்சி தனது மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க துவக்கத்தில் ரசிகர்களிடையே சற்று ஆர்வம் குறைவாக காணப்பட்டது. ஆனால் தற்போது போட்டியாளர்கள் தனித்தனி குழுவாக பிரிந்து சண்டையிடத் துவங்கியுள்ளதால் நிகழ்ச்சி சூடுபிடிக்கத்துவங்கியுள்ளது.
இதையும் படிக்க | இந்திய எல்லையில் ராணுவ வீரர்களுடன் நடிகர் அஜித்: வைரலாகும் புகைப்படம்
போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ரசிகர் பட்டாளம் உருவாகத் துவங்கியுள்ளது. அந்த வகையில் நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சியின் நடவடிக்கைகளுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது. மற்ற போட்டியாளர்களிடையே பிரச்னை ஏற்படும்பொழுது அவர் சரியான முடிவெடுத்து வருவதாக கருத்து கூறி வருகின்றனர்.
தனியார் தொலைக்காட்சியில் குழந்தைகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர் இமான் அண்ணாச்சி. அந்த நிகழ்ச்சியின் கிடைத்த புகழின் காரணமாக ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடிக்கத் துவங்கினார். இந்த நிலையில் இமான் அண்ணாச்சி தனது மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Imman Annachi Family!#BiggBoss5Tamil pic.twitter.com/FPaq6XYBib
— Christopher Kanagaraj (@Chrissuccess) October 20, 2021