கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

'நவம்பர் 25 தான்டா தீபாவளி' - 'மாநாடு' படம் தொடர்பாக எஸ்.ஜே.சூர்யா அதிரடி கருத்து: ஆச்சரியத்தில் ரசிகர்கள்

சிம்புவின் மாநாடு படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ள கருத்து ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :26 அக்டோபர் 2021, 7:15 am

DIN

சிம்புவின் மாநாடு படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ள கருத்து ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் முதலில் தீபாவளியை முன்னிட்டு வருகிற நவம்பர் 4 ஆம் தேதி வெளியாவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் ரஜினிகாந்த்தின் அண்ணாத்த திரைப்படத்தின் வெளியீடும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் மாநாடு திரைப்படத்தின் வெளியீடு திடீரென வருகிற நவம்பர் 25 ஆம் தேதிக்கு தள்ளிப்போனது. இதுகுறித்து விளக்கமளித்த மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி,  யாருடனும் போட்டியில்லை எனவும், விநியோகிஸ்தர்கள் பாதிக்கக் கூடாது என்பதாலேயே இத்தகைய முடிவை எடுத்ததாகவும் தனக்கு இந்தப் படத்தின் மேல் முழு நம்பிக்கை இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

இந்த நிலையில் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், ''மாநாடு படத்தின் டப்பிங் பணிகளை 5 நாட்களில் முடித்தேன். என்னுடைய நாடி நரம்பு, கழுத்து முதுகு, தொண்டை எல்லாம் வலி எடுத்தது. 10 நாட்களாவது ஓய்வு தேவை என என்னை நானே கெஞ்சிக்கேட்டுக்கொண்டேன். ஆனால் படத்தைப் பார்த்த போது, தீபாவளி நவம்பர் 25 தான்டா. என்று சொல்லத்தோன்றியது'' என்று குறிப்பிட்டுள்ளார். 

மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.