
நாயகி தொடரில் அனு என்ற வேடத்தின் மூலம் பிரபலமான பிரதீபாவிற்கும் அவரது காதலருக்கும் நடைபெற்ற திருமணத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி தொடரில் அனு என்ற வேடத்தில் நடித்தவர் பிரதீபா. நாயகி தொடரில் திருவின் தங்கையாக எதிர்மறை கதாப்பாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
தான் ஏற்ற கதாப்பாத்திரத்தை சிறப்பாக கையாண்டிருந்த பிரதீபா, இந்தத் தொடர் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றார்.
இதனையடுத்து அவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதீபாவிற்கும் அவரது காதலர் ஆனந்த் என்பவருக்கும் சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் இரு வீட்டார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பிரதீபா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, வணக்கம் பிரதீபா, இருவருக்கும் திருமண நாள் வாழத்துகள், இருவரும் பல்லாண்டு மகிழ்ச்சிகரமாக வாழ வேண்டும் என்று விடியோ மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.