
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து ஷீலா விலக, அவரது மகன் விக்ராந்த் காரணம் என்று பரவி வரும் தகவலை அவர் மறுத்துள்ளளார்.
நான்கு அண்ணன் - தம்பிகளின் வாழ்க்கையை மையப்படுத்தி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்தத் தொடரில் 4 சகோதரர்களின் அம்மாவாக ஷீலா நடித்திருந்தார். இவர் நடிகர் விக்ராந்த்தின் அம்மா என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | நாளை(செப்-24) வெளியாகிறது ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’
இந்த நிலையில் சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஷீலா கதாப்பாத்திரம் இறந்ததுபோல் காட்டப்பட்டது. இந்த நிலையில், நடிகர் விக்ராந்த் தற்போது ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.
இந்த நிலையில் விக்ராந்த் ஜி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் காரணமாகவே ஷீலா பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக தகவல் பரவியது. இதனையடுத்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஷீலா, அந்தத் தகவலை மறுத்தார். மேலும், விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் தொடர் ஒன்றில் கதாநாயகிக்கு அம்மாவாக நடிக்கவிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.