பாரதி கண்ணம்மா - ப்ரமோ மட்டுமே போதுமா? குழப்பத்தில் தவிக்கும் கதை

பாரதி கண்ணம்மா - ப்ரமோ மட்டுமே போதுமா? குழப்பத்தில் தவிக்கும் கதை

உச்சிக்குச் செல்வது எவ்வளவு கடினமோ அதைவிடக் கடினம் அந்த இடத்தைத் தக்கவைத்துக் கொள்வது என்பார்கள்.

ஒரேயொரு ப்ரமோ மூலமே கிடைத்த ரீச்-ஐ வைத்துக் கடந்த வாரம் முழுவதும் பாரதி கண்ணம்மா தொடரை நகர்த்திச் சென்றுவிட்டனர்.

ஆனால், அந்த ப்ரமோவில் வந்த காட்சியும் தொடரில் வந்தபோதிருந்த காட்சிக்கும் இணைத்துப் பார்க்கப் பெரும்பாலான பார்வையாளர்கள் கடுப்பாகிவிட்டனர் என்றுகூட கூறலாம் - பெற்றோரிடம் பாரதி பேசுகிற பேச்சுதான்!

உச்சிக்குச் செல்வது எவ்வளவு கடினமோ அதைவிடக் கடினம் அந்த இடத்தைத் தக்கவைத்துக் கொள்வது என்பார்கள். பாரதி கண்ணம்மாவின் கதையும் ஏறத்தாழ அதேபோலதான் தெரிகிறது.

பெருமளவில் பார்வையாளர்களைச் சென்றடைந்துகொண்டிருக்கும் பாரதி கண்ணம்மாவின் இடத்தைத் தக்கவைக்கக் கதைக் குழுவினர் என்னென்னவோ செய்கின்றனர். ஆனால், எல்லா நேரங்களிலும் இவை வெற்றி பெறுவதில்லை, சில நேரம் சொதப்பிவிடுகிறது. கடந்த வார எபிசோட்கள் நல்ல எடுத்துக்காட்டு எனலாம்.

கதை நகர்ந்துசெல்லும் விதத்தைப் பார்த்து பாரதி மட்டுமல்ல, வாசகர்களும்கூட குழப்பத்தில்தான் இருக்கிறார்கள்.

இந்த வாரத் தொடரைத் தூக்கிநிறுத்தும் நோக்கில் வெளியிடப்பட்ட ப்ரமோவில் பாரதியின் அப்பாவுக்கு நெஞ்சுவலி எல்லாம் வருகிறது. மனைவி, மகன்கள், மருமகள்கள் எல்லாம் பரபரப்பாகிறார்கள். மருத்துவமனைக் காட்சிகள் எல்லாம் வருகின்றன. பாரதி - கண்ணம்மாவிடம் சத்தியம் எல்லாம் கேட்கிறார். இதுவும் நிஜத்திலேயே நடக்கப் போகிறதா, நடிப்பா என்று தெரியவில்லை.

வாரத்தின் முதல் நாளிலேயே தனக்கு நெஞ்சு வலிப்பதைப் போலிருக்கிறது என்று வேறு பாரதியின் அப்பா, அவருடைய மனைவி, மகனுக்கு மட்டுமின்றி நமக்கும் சேர்த்தே சொல்லிவிட்டார். அதுதான் தெரியுமே, ப்ரமோவில் பார்த்தோமே என்று பார்வையாளர்கள் வந்து சொல்லாததுதான் பாக்கி.

இதனிடையே, ஏதாவது புது டிவிஸ்ட்க்கு முயற்சி செய்கிறார்களோ என்னவோ, அகிலையும் சித்தியையும் அம்மா - அப்பா என்று குழந்தை ஹேமா அழைப்பது போல கதை நகர்த்தப்படுகிறது.

இவற்றுக்கு நடுவே வேண்டாத ஆணி போல பொருத்தமேயில்லாமல் கண்ணம்மா - வெண்பா - இன்னொரு மகள் பற்றிய கதையும் சவால்களும் மற்றொரு பக்கம் சென்றுகொண்டிருக்கிறது.

எல்லாரும் பார்க்கும் வகையில் தெளிந்த நீரோடை போல சென்றுகொண்டிருந்த கதையில் என்னவோ திடீரென நிறைய குழப்பங்கள் அல்லது டிவிஸ்ட்கள்.

இவையெல்லாம் நல்லதற்கா, கெட்டதற்கா? தொடரைப் பார்க்கச் செய்யுமா, சேனலை மாற்றச் செய்யுமா என்பதை அடுத்தடுத்த நாள்களில் வரக் கூடிய எபிசோட்கள் தெரிவித்துவிடும். பார்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com