மொட்டைத் தலையுடன் இருக்கும் படத்தை பகிர்ந்து அதிர்ச்சியளித்த நடிகை - என்ன ஆனது ?

மொட்டைத் தலையுடன் இருக்கும் படத்தை நடிகை சஞ்சனா கல்ராணி பகிர்ந்து அதிர்ச்சியளித்துள்ளார். 
மொட்டைத் தலையுடன் இருக்கும் படத்தை பகிர்ந்து அதிர்ச்சியளித்த நடிகை - என்ன ஆனது ?
Published on
Updated on
1 min read

ஒரு காதல் செய்வீர் என்ற தமிழ் படத்தில் நடித்தவர் சஞ்சனா கல்ராணி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஐவர் என்ற இணையத் தொடரிலும் நடித்திருந்தார். 

இவர் தமிழில் பிரபலமாக இருக்கும் நிக்கி கல்ராணியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. சஞ்சனா கல்ராணி கடந்த 2020 ஆம் ஆண்டு போதைப் பொருள் வழக்கில் கைதானார். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவர் அஜீஷ் பாஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது கர்ப்பமாக இருக்கிறார். 

இந்த நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மொட்டைத் தலையுடன் இருக்கும் படத்தை பகிர்ந்து அதிர்ச்சியளித்துள்ளார். இதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளதாவது, அழகு என்பது பார்க்கும் கண்களைப் பொறுத்தது. அதனால் என்னுடைய தலைமுடியை தியாகம் செய்துவிட்டேன். 

பல சிரமங்களுக்கு பிறகு என் வாழ்க்கை அழகாக இருக்கிறது. எனது வாழ்க்கையின் இந்தக் கட்டத்திற்கு என்னால் போதுமான அளவு கடவுளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். என் குழந்தையை வரவேற்க தயாராகியிருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com