
பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இயக்குநர் வம்சி ஏற்கனவே கார்த்தி - நாகர்ஜுனா இணைந்து தோழா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர்.
இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு தயாரிக்கிறார். தயாரிப்பாளர் தில் ராஜு ஒரு பேட்டியில் விஜய் - வம்சி படம் பூவே உனக்காக படத்தைப் போல குடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும் படமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க | நாக சைதன்யா - வெங்கட் பிரபு படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு - யார் இசை?
தளபதி 66 படத்தின் பூஜை இன்று (ஏப்ரல் 6) நடைபெற்றது. நிகழ்வில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், இசையமைப்பாளர் தமன், தயாரிப்பாளர் தில் ராஜு, இயக்குநர் வம்சி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக நடிகை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் மற்றும் சரத்குமார் இருக்கும் படத்தைப் பகிர்ந்து, தளபதி 66 படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து சரத்குமார் நடிப்பது மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.
Happy to see this #vijay66 announcement with @realsarathkumar on board,with the one and only @actorvijay , a power packed film with the gorgeous @iamRashmika @DilRajuProdctns dir #Vamsi pic.twitter.com/i4ld8AgjSk
— Radikaa Sarathkumar (@realradikaa) April 6, 2022