ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பஞ்சாபி முறையில் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் ரன்பீர் - ஆலியா ஜோடி

ஹிந்தி நட்சத்திரங்களான ரன்பீர் - ஆலியா இருவரும் பஞ்சாபி முறையில் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :6 ஏப்ரல் 2022, 6:22 am

DIN

பாலிவுட் பிரபலங்களான ரன்பீரும் ஆலியாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். சமீபத்தில் ஒரு பேட்டியில் தங்களது திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், கரோனா ஊரடங்கு இல்லையென்றால் எங்கள் திருமணம் நடைபெற்றிருக்கும் என்றும் ரன்பீர்  தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் இவர்களது திருமணம் பஞ்சாபி முறையில் நடைபெறவிருக்கிறது. இவர்களது திருமண சடங்குகள் வருகிற 13 ஆம் தேதியே துவங்குகிறது எனவும் ஏப்ரல் 17 ஆம் தேதி இவர்களது திருமணம் எளிய முறையில் நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே மற்றும் விக்கி கவுசல் - கேத்ரீனா கைஃப் திருமண கொண்டாட்டங்கள் ஹிந்தி திரையுலகத்தை கலக்கின என்பது குறிப்பிடத்தக்கது. ரன்பீர் - ஆலியா திருமணத்துக்கு இருவருக்கும் மிக நெருங்கிய பாலிவுட் நட்சத்திரங்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களது திருமணம் மும்பை செம்பூரில் நடைபெறவிருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.