நடிகர் நாசருக்கு அமீரகம் அளித்த கெளரவம்
நடிகர் நாசருக்கு அமீரகம் அளித்த கெளரவம்

நடிகர் நாசருக்கு அமீரகம் அளித்த கெளரவம்

பிரபல நடிகர் நாசருக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி மரியாதை செய்துள்ளது.
Published on

பிரபல நடிகர் நாசருக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி மரியாதை செய்துள்ளது.

தமிழ் சினிமா உலகில் மிகப் பெரிய ஆளுமை நடிகராக கருத்தக்கூடியவர்களில் ஒருவர் நடிகர் நாசர், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் அமீரகம் சென்றுள்ள நடிகர் நாசருக்கு அந்நாட்டு அரசால் வழங்கப்படும் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. இவ்விசா சினிமா துறை பிரபலங்கள் பலருக்கு வழங்கப்பட்டு வந்தாலும் தமிழ் திரையுலகில் வெகு சிலரே இதனை பெற்றுள்ளனர்.

நடிகர் நாசர் அவர்களுக்கு இவ்விசா கிடைக்க ஏற்பாடு செய்த துபை வாழ் இந்திய தொழில் அதிபர் திரு.வசிம் அதானுடன் நடிகர் நாசர் கோல்டன் விசாவைப் பெற்றார்.

இதையும் படிக்க | ரூ.5 கோடியை ஏமாற்றியதாக நடிகர் விமல் மீது போலீஸில் புகார்

கோல்டன் விசா அளித்ததற்காக அமீரக அரசிற்கும் இதற்கு ஏற்பாடுகள் செய்த தொழில் அதிபர் வசிம் அதான் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார். முன்னதாக தமிழ் திரையுலகின் நடிகர் பார்த்திபன் கோல்டன் விசா பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com